×

ஏலகிரி மலைப்பாதையில் சுற்றுலா வேன் விபத்து: சென்னையை சேர்ந்த 13 பேர் காயம்

ஏலகிரி: சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த 3 குடும்பத்தினர் ஏலகிரி மலைக்கு வேன் மூலம் சுற்றுலா வந்துவிட்டு, நேற்று சென்னக்கு புறப்பட்டனர். வேன் 12வது கொண்டை ஊசி வளைவில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய வேன் மலைப்பாதை தடுப்பு சுவரில் மோதி நின்றது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த டிரைவர் உட்பட 13 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இவர்களில் 5 பேர் பெண்கள். இதுகுறித்து தகவல் அறிந்த ஏலகிரி மலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post ஏலகிரி மலைப்பாதையில் சுற்றுலா வேன் விபத்து: சென்னையை சேர்ந்த 13 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : van ,Chennai ,Elagiri ,Choolaimedu ,Elagiri Hill ,12th Kondai needle curve ,Dinakaran ,
× RELATED ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான...