×

திடீரென டயர் வெடித்ததால் வேன் கவிழ்ந்து ஒருவர் பலி

திருப்போரூர்: செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அருகே அணுபுரம், நரசங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மகள் திருமண நிகழ்ச்சி குன்றத்தூரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்காக உறவினர்களை ஏற்றிச் செல்ல வேன் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குன்றத்தூர் சென்று திருமண வரவேற்பு நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பிய நிலையில், திருப்போரூர் புறவழிச் சாலையில் வேனின் பின்பக்க டயர் திடீரென வெடித்து.

இதில் வேன் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில், விட்டிலாபுரம் பகுதியைச் சேர்ந்த குமார் (52) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து திருப்போரூர் அரசு மருத்துவமனை, மாமல்லபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து திருப்போரூர் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post திடீரென டயர் வெடித்ததால் வேன் கவிழ்ந்து ஒருவர் பலி appeared first on Dinakaran.

Tags : Shankar ,Anupuram, Narasanguppam ,Kalpakkam, Chengalpattu district ,Kunradthur ,
× RELATED எனக்கே பிரமிப்பா இருந்துச்சு!😱 Shankar Speech at Indian 2 Trailer Launch | Kamal | Anirudh.