×

பட்டினப்பாக்கம் காவலர் குடியிருப்பில் உளவுத்துறை எஸ்ஐ தற்கொலை: போலீசார் விசாரணை

சென்னை: சென்னை பட்டினப்பாக்கம் காவலர் குடியிருப்பில் வசித்து வந்தவர் ஜான் ஆல்பர்ட் (33). கன்னியாகுமாரி மாவட்டத்தை சேர்ந்த இவர், தமிழ்நாடு காவல்துறையில் கடந்த 2016ம் ஆண்டு உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்தார். இவர் சிறப்பாக பணியாற்றியதால், மாநில உளவுத்துறையில் சென்னை பெருநகர தி.நகர் காவல் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு ஜான்சி ஜெஸ்சி என்பவருடன் திருமணம் நடந்து 2 வயதில் குழந்தை உள்ளது. பணப்பிரச்னை காரணமாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று காலை வழக்கம் போல் ஜான் ஆல்பர்ட் பணிக்கு சென்று விட்டு மதியம் 2.30 மணிக்கு வீட்டிற்கு வந்தார். வரும் போதே சற்று மன குழப்பத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

அதேநேரம் தனது மனைவி ஜான்சி ஜெஸ்சியிடம் வழக்கு தொடர்பாக நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும், அதனால் எனது சீருடையை அயன் செய்ய போகிறேன் என்று கூறிவிட்டு அறைக்கு சென்று கதவை உள்பக்கமாக தாழிட்டுக் கொண்டார். கணவன் வெகு நேரம் வெளியே வராததால் மனைவி ஜான்சி ஜெஸ்சி சந்தேகமடைந்து அறையின் கதவை பலமுறை தட்டியும் கதவை திறக்காததால் அச்சமடைந்து, அருகில் வசிக்கும் நபர்கள் உதவியுடன் அறையின் கதவை உடைத்து பார்த்த போது, மின் விசிறியில் மனைவியின் துப்பட்டாவால் ஜான் ஆல்பர்ட் தூக்கில் தொங்கியது தெரியவந்தது. உடனே அவரை மீட்டு 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்தார்.

அதன்பேரில் விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஜான் ஆல்பர்ட்டை பரிசோதனை செய்துவிட்டு, அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அதை கேட்டு அவரது மனைவி, 2 வயது குழந்தையுடன் கதறி அழுதார். தகவலறிந்த பட்டினப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உதவி ஆய்வாளர் ஜான் ஆல்பர்ட் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்ேபட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், குடும்ப பிரச்னை காரணமாக உதவி ஆய்வாளர் தற்கொலை ெசய்து கொண்டது தெரியவந்துள்ளது. இருந்தாலும், போலீசார் வேறு ஏதேனும் காரணமா என தொடர்ந்து விசாரிக்கின்றனர். மாநில உளவுத்துறை இளம் உதவி ஆய்வாளர் ஒருவர் குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் போலீசாரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post பட்டினப்பாக்கம் காவலர் குடியிருப்பில் உளவுத்துறை எஸ்ஐ தற்கொலை: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Intelligence SI ,Pattinpakkam police ,CHENNAI ,John Albert ,Pattinpakkam ,Kanyakumari district ,Tamil Nadu Police ,
× RELATED திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில்...