×

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தவரை சட்டப்பூர்வ வாரிசாக ஏற்றுக் கொள்ள முடியாது: ஐகோர்ட் தீர்ப்பு

சென்னை: திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தவரை சட்டப்பூர்வ வாரிசாக ஏற்றுக் கொள்ள முடியாது என ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. வேலூரைச் சேர்ந்த ஜெயச்சந்திரனுக்கு திருமணமான நிலையில் மற்றொறு பெண்ணுடன் வாழ்ந்து வந்துள்ளார். திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்த மார்கரெட் அருள்மொழி பெயரில் 2009-ல் வீட்டை எழுதி வைத்துள்ளார். 2013-ல் மார்கரெட் அருள்மொழி இறந்துவிட்டதால் செட்டில்மென்ட் பத்திரத்தை ஜெயச்சந்திரன் ரத்து செய்துள்ளார். தன் மகள் மார்கரெட் அருள்மொழிக்கு வாரிசு இல்லாததால் அவர் பெயரில் உள்ள வீடு தனக்கு சொந்தம் என தந்தை வழக்கு தொடர்ந்துள்ளார். தந்தை யேசுரத்தினம் தொடர்ந்த வழக்கில் அவருக்கு சாதகமான உத்தரவை பிறப்பித்து வேலூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தவரை சட்டப்பூர்வ வாரிசாக ஏற்றுக் கொள்ள முடியாது: ஐகோர்ட் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : iCourt ,Chennai ,Jayachandran ,Vellore ,Margaret Arulmozhi ,
× RELATED திருமணம் செய்யாமல் சேர்ந்து...