×

தமிழிசை சவுந்திரராஜனை பெண் என்றும் பாராமல் மேடையில் வைத்து அமித் ஷா அவமானப்படுத்தியது மிகப்பெரிய தவறு: ஜெயக்குமார்

சென்னை: தமிழிசை சவுந்திரராஜனை பெண் என்றும் பாராமல் மேடையில் வைத்து அமித் ஷா அவமானப்படுத்தியது மிகப்பெரிய தவறு என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். “மேடையில் இருந்த அமித்ஷாவின் உடல்மொழியே அவர் ஆத்திரத்தில் தமிழிசையை பேசியதை உணர முடிந்தது. உள்துறை அமைச்சராக இருந்து கொண்டு தமிழிசையை மேடையில் வைத்து கடுமையாக பேசியிருக்கக் கூடாது. மேடை நாகரீகம், பண்பாடு என்னவென்று தெரியாமல் அமித்ஷா நடந்து கொண்டுள்ளார். அண்ணாமலை வந்தபிறகு சமூகவிரோதிகளின் கூடாரமாக பாஜக மாறிவிட்டதை தமிழிசை தெளிவுபடுத்தி உள்ளார். தமிழிசை பேசியது தவறு என்றால், டெல்லிக்கு அழைத்து கண்டித்திருக்கலாம், மேடையில் அவமானப்படுத்தியிருக்கக் கூடாது” என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

The post தமிழிசை சவுந்திரராஜனை பெண் என்றும் பாராமல் மேடையில் வைத்து அமித் ஷா அவமானப்படுத்தியது மிகப்பெரிய தவறு: ஜெயக்குமார் appeared first on Dinakaran.

Tags : Amit Shah ,Soundararajan ,Jayakumar ,Chennai ,Former Minister ,Amitsha ,
× RELATED டெல்லியில் உள்ள பாஜக தலைமை...