×

மேற்குவங்க ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்: பிரதமர் மோடி அறிவிப்பு

டெல்லி: மேற்குவங்க ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணமும் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மேலும் ரயில் விபத்து குறித்து பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். “மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் உயிரிழப்பு செய்தியறிந்து வேதனையுற்றேன்” என குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். “மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த ரயில் விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்; காயமடைந்தவர்கள் குணமடைய பிரார்த்திக்கிறேன்’ என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

The post மேற்குவங்க ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்: பிரதமர் மோடி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Delhi ,Modi ,Western Railway Accident ,President of the Republic ,Dinakaran ,
× RELATED நாட்டில் இருந்து வறுமையை முற்றிலும்...