×

திருப்பதி ஏழுமலையான் கோயில் செப்டம்பர் மாத தரிசன டிக்கெட் நாளை ஆன்லைனில் வெளியீடு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கட்டண சேவைகளுக்கான(ஆர்ஜித சேவைகளுக்கான) செப்டம்பர் மாத டிக்கெட் ஆன்லைன் முன்பதிவு இம்மாதம் 18ம் தேதி(நாளை) காலை 10 மணிக்கு தேவஸ்தானத்தின் ஆன்லைனில் வெளிிடப்படுகிறது. இந்த சேவை டிக்கெட்டுகளில் குலுக்கல் மூலம் தேர்வு செய்யும் சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை உள்ளிட்டவற்றுக்கு நாளை காலை 10 மணி முதல் தொடங்கி 20ம் தேதி காலை 10 மணி வரை பதிவு செய்யலாம்.

குலுக்கலில் தேர்தெடுக்கப்பட்டோருக்கு மே 20 முதல் 22ம் தேதி வரை மதியம் 12 மணிக்கு முன்பு பணம் செலுத்தி டிக்கெட் பெறலாம்.  இதேபோன்று செப்டம்பர் மாதம் நடைபெறும் கல்யாண உற்சவம், ஊஞ்சல்சேவை, ஆர்ஜித பிரமோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை டிக்கெட்டுகள் வரும் 21ம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். இதே சேவைகளுக்கு பக்தர்கள் நேரடியாக பங்கேற்காமல் சுவாமி தரிசனம் மட்டும் செய்யும் விர்சூவல் சேவைகளுக்கான டிக்கெட் 21ம் தேதி அன்று மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.

மேலும், செப்டம்பர் மாதத்திற்கான அங்கபிரதட்சணம் டோக்கன்கள் வரும் 22ம் தேதி அன்று காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். அதே நாளில் பிற்பகல் 3 மணிக்கு மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தீராத நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான செப்டம்பர் மாதத்திற்கான இலவச சிறப்பு தரிசன டோக்கன்கள் ஆன்லைனில் வெளியிடுகிறது.

ரூ.300 சிறப்பு நுழைவுச் தரிசன டிக்கெட் வரும் 24ம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. திருமலை – திருப்பதியில் ஆகஸ்ட் மாதம் அறைகள் முன்பதிவு செய்ய அதே நாளில் பிற்பகல் 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். எனவே தேவஸ்தான இணையதளம் மூலம் ஆர்ஜித சேவை மற்றும் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post திருப்பதி ஏழுமலையான் கோயில் செப்டம்பர் மாத தரிசன டிக்கெட் நாளை ஆன்லைனில் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Tirupati Esumalayan Temple ,Tirumala ,Tirupati Eyumalayan Temple ,Devasthanam ,Subrapadam ,Archanai ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூ.4.46 கோடி உண்டியல் காணிக்கை