×

வீட்டில் பதுக்கிய யானை தந்தம் மான் தோலுடன் 4 பேர் கைது

திருச்சி: திருச்சியில் சட்டவிரோதமாக யானை தந்தம், புள்ளிமான் தோல் ஆகியவை பதுக்கி விற்கப்படுவதாக மத்திய வன உயிரின குற்றங்கள் தடுப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து திருச்சி உதவி வனப்பாதுகாவலர் சரவணக்குமார் தலைமையில் 8 பேர் கொண்ட தனிப்படையினர், ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள ஸ்ரீதர்(49) என்பவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.

அங்கு பதுக்கி வைத்திருந்த 2.9 கிலோ எடையுள்ள யானை தந்தம் மற்றும் புள்ளிமான் தோல் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து ஸ்ரீதர் மற்றும் இந்த சட்டவிரோத விற்பனைக்கு உடந்தையாக இருந்த திருச்சி டவுன் ஸ்டேசன் பகுதியை சேர்ந்த வெங்கடசுப்பிரமணியன் (65), திருவானைக்காவல் பாண்டுரங்கன்(51), சத்திரம் முரளி(60) ஆகியோரை கைது செய்தனர்.

The post வீட்டில் பதுக்கிய யானை தந்தம் மான் தோலுடன் 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Trichy ,Central Wildlife Crimes Prevention Division ,Srirangam ,Assistant ,Forest Guard ,Saravanakumar ,
× RELATED ஸ்ரீரங்கம் அய்யாளம்மன் படித்துறையில்...