×

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு அதிமுகவின் இயலாமை: அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

சென்னை: கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா கால்பந்து போட்டி தொடக்க விழா திருவிக நகர் மாநகராட்சி மைதானத்தில் நேற்று நடந்தது. மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் அசோக் குமார் தலைமை தாங்கினார். அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலை வகித்தார். அமைச்சர் மனோ தங்கராஜ் போட்டிகளை தொடங்கி வைத்தார்.பின்னர் அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களிடம் கூறியதாவது: விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பு என்பது அவர்கள் இயலாமையை காட்டுகிறது.

எந்த ஒரு சூழலிலும் அவர்களால் வெற்றி பெற முடியாது என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர். தேர்தல் ஆணையம் மாநில அரசு கட்டுப்பாட்டில் இல்லை, அது ஒன்றிய அரசு கட்டுப்பாட்டில் உள்ளது. அப்படி இருக்கையில் எங்களை காரணமாக கூறுவது அவர்களின் இயலாமையை மட்டுமே காட்டுகிறது என்றார். இந்நிகழ்ச்சியில் மேயர் பிரியா, மண்டலக்குழு தலைவர் சரிதா, பகுதி செயலாளர்கள் ஐசிஎப் முரளி, நாகராஜன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சந்துரு, மகேஷ் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு அதிமுகவின் இயலாமை: அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Vikravandi ,Minister Mano Thangaraj ,CHENNAI ,Tiruvik Nagar Corporation Stadium ,District Sports Development ,Ashok Kumar ,Minister ,PK Shekharbabu ,Mano… ,Vikrawandi ,Mano Thangaraj ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் பால் உற்பத்தி திறனை...