×

`வெல்கம் மேடம்’ என வரவேற்று ஐஏஎஸ் அதிகாரியான மகளுக்கு `சல்யூட்’ அடித்த எஸ்பி: போலீஸ் அகாடமியில் நெகிழ்ச்சி

திருமலை: தெலங்கானாவில் ஐஏஎஸ் அதிகாரியாக வந்த தனது மகளை, `வெல்கம் மேடம்’ என அவரது தந்ைதயான எஸ்பி அழைத்து வரவேற்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தெலங்கானா போலீஸ் அகாடமியில் துணை இயக்குனராக பணிபுரிபவர் வெங்கடேஸ்வரலு. இவரது மகள் உமாஹாரதி. யூபிஎஸ்சி தேர்வு மூலம் கடந்த 2022ம் ஆண்டில் ஐஏஎஸ் ஆக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் ஐஏஎஸ் அதிகாரியான உமாஹாரதி, நேற்று தெலங்கானா மாநில போலீஸ் அகாடமியில் நடந்த நிகழ்ச்சிக்கு சென்றார்.

அப்போது அங்கு பணியில் இருந்த அகாடமியின் துணை இயக்குனரும் (எஸ்பி ரேங்க்) அவரது தந்தையுமான வெங்கடேஸ்வரலு, தனது மகள் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வந்த மகிழ்ச்சியுடன் அவருக்கு `சல்யூட்’ அடித்தும், பூங்கொத்து கொடுத்தும் வரவேற்றார். இருவரும் தந்தை, மகள் என அங்கிருந்த அனைவருக்கும் தெரிந்திருந்தாலும் உறவுமுறையை அங்கே இருவரும் காட்டிக்கொள்ளவில்லை.

வெங்கடேஸ்வரலுவை `சார்’ என மகள் அழைத்தார். அதேபோன்று உமா ஹாரதியை `மேடம்’ என வெங்கடேஸ்வரலு அழைத்து வரவேற்றார். இந்த தருணத்தின்போது அங்கிருந்த மற்ற அதிகாரிகள் நெகிழ்ச்சியடைந்தனர். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

The post `வெல்கம் மேடம்’ என வரவேற்று ஐஏஎஸ் அதிகாரியான மகளுக்கு `சல்யூட்’ அடித்த எஸ்பி: போலீஸ் அகாடமியில் நெகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : SP ,IAS ,Tirumala ,Telangana ,Venkateswaralu ,Telangana Police Academy ,Umaharathi ,UPSC ,
× RELATED கல்வி உதவித்தொகை, கடன் தருவதாக வரும்...