×
Saravana Stores

தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரியில் தேசிய விழிப்புணர்வு கருத்தரங்கு

 

தூத்துக்குடி, ஜூன் 16: தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரியில் நடந்த கருத்தரங்கில் கல்லூரி முதல்வர் கனகராஜ் வரவேற்றுப் பேசினார். உயிரறிவியல் உதவிப்பேராசிரியர் அல்லிமுத்து கருத்தரங்கத்தின் நோக்கத்தை எடுத்துரைத்தார். கல்லூரியின் முன்னாள் முதல்வர் தாமோதரன் வாழ்த்திப் பேசினார். கருத்தரங்கின் முதல் அமர்வில் முனைவர் தாமோதரன் சமூகத்தில் தத்துவ நெறிகளின் பயன்பாடுகள் குறித்து விளக்கினார்.

2ம் அமர்வில் இந்திராகாந்தி தேசிய மலைவாழ் பல்கலைக்கழக உதவிப்பேராசிரியர் ஹரிஹரன் இந்திய சமூகத்தில் தத்துவத்தின் தாக்கம் குறித்து எடுத்துரைத்தார். 3ம் அமர்வில் மதுரை காமராசர் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி இயக்குநர் (பொறுப்பு) பேராசிரியர் முத்துப்பாண்டி இந்திய கலாசாரத்தின் சாரம் குறித்து விளக்கிப் பேசினார்.

4ம் அமர்வில் அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலை மற்றும் இணையவழி கல்வித்துறை பேராசிரியர் வாசிமலைராஜா தாகூரின் வாழ்வியல் சிந்தனைகள் மற்றும் சமூகத்தாக்கம் குறித்து விரிவாக பேசினார். கருத்தரங்கச் செயலாளரான முனைவர் அல்லிமுத்து கருத்தரங்க அறிக்கை வழங்கினார். கருத்தரங்கில் கல்லூரி இணைப்பேராசிரியர் பிரேமலதா உள்ளிட்ட பேராசிரியர்கள் மற்றும் மாணவ- மாணவிகள் 271 பேர் பங்கேற்றனர். முனைவர் சசிகலா நன்றி கூறினார்.

The post தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரியில் தேசிய விழிப்புணர்வு கருத்தரங்கு appeared first on Dinakaran.

Tags : Thoothukudi V. U. C. National Awareness Seminar ,College of ,Pedagogy ,Thoothukudi ,Thoothukudi V. U. C. College ,Principal ,Kanakaraj ,College of Education ,Assistant Professor of Biosciences ,Allimuthu ,Damodharan ,Thoothukudi Va ,. U. C. National Awareness Seminar in ,Education ,Dinakaran ,
× RELATED சென்னை, லேடி வில்லிங்கடன் கல்லூரியில்...