×

கருப்பண்ணசாமி கோயிலில் பித்தளை சிலை திருட்டு

பாப்பிரெட்டிப்பட்டி, ஜூன் 16: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பையர்நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன், விவசாயி. இவர், தனது உறவினர்களான 18 பேருடன் சேர்ந்து, தேவராஜபாளையம் பகுதியில் கருப்பண்ணசாமி கோயில் கட்டியுள்ளார். இங்கு பல ஆண்டுகளாக பூஜைகள் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் காலை, வெங்கடேசன் கோயிலுக்கு சென்ற போது, அங்கு கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அங்கு வைத்திருந்த ஒன்றரை அடி உயரம் கொண்ட பித்தளையாலான கருப்பண்ண சுவாமி சிலை மற்றும் பூஜை பொருட்களை மர்மநபர்கள் திருடிச்சென்றிருப்பது தெரிந்தது. இதுபற்றி அவர் அளித்த புகாரின் பேரில், பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா என ஆய்வு செய்து வருகின்றனர்.

The post கருப்பண்ணசாமி கோயிலில் பித்தளை சிலை திருட்டு appeared first on Dinakaran.

Tags : Karuppannasamy ,Pappyrettipatti ,Venkatesan ,Payarnatham ,Karuppannaswamy temple ,Devarajapalayam ,Karuppannaswamy ,
× RELATED இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்த மதுரை எம்.பி., சு.வெங்கடேசன்…!