×

குழந்தை இல்லாததால் இளம்பெண் தற்கொலை

கிருஷ்ணகிரி, ஜூன் 16: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே எமக்கல்நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் விஜி. இவர் பேக்கரி கடை வைத்துள்ளார். இவரது மனைவி பிரியதர்ஷினி(22). இவர்களுக்கு கடந்த நான்கு வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால், குழந்தை இல்லை. இதனால், மனவேதனையில் இருந்து வந்த பிரியதர்ஷினி, நேற்று முன்தினம், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த பர்கூர் போலீசார், அவரது உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரித்து வருகின்றனர். திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால், வரதட்சணை கொடுமை காரணமா? என ஆர்டிஓவும்
விசாரித்து வருகிறார்.

The post குழந்தை இல்லாததால் இளம்பெண் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Emakalantham ,Parkur ,Krishnagiri district ,Priyadarshini ,
× RELATED ஜவுளிக்கடையில் தீ ரூ.6 கோடி துணி நாசம்