×

பொதுமக்களின் பிரச்னைகள் உடனுக்குடன் தீர்த்து வைக்கப்படும்: வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து எஸ்.ஜெகத்ரட்சகன் எம்பி உறுதி

திருத்தணி: திருத்தணியில் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற வைத்த வாக்காளர்களை, எஸ்.ஜெகத்ரட்சகன் எம்பி நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். தமிழ்நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 19ம்தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று, கடந்த 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானது. இந்த, நாடாளுமன்ற தேர்தலில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட எஸ்.ஜெகத்ரட்சகன் 3.06 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் 4வது முறையாக வெற்றி பெற்றார். வெற்றிபெற்ற எம்.பிக்கள் தொகுதி மக்களை சந்தித்து நன்றி தெரிவிக்க வேண்டும் என்று தமிர்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

அதன்படி, நேற்று முன்தினம் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருத்தணி சட்டமன்ற தொகுதியில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வாக்காளர்களை சந்தித்து, மாபெரும் வெற்றி தேடி தந்த வாக்காளர்களுக்கு எஸ்.ஜெகத்ரட்சகன் எம்பி நன்றி தெரிவித்தார். இதனையடுத்து, திருத்தணி மாபொசி சாலையில் காந்தி சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய எஸ்.ஜெகத்ரட்சகன் எம்பி, திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.சந்திரன் எம்எல்ஏ, தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.பூபதி ஆகியோர் முன்னிலையில், மாபொசி சாலை, பேருந்து நிலையம், அரக்கோணம் சாலை ஆகிய பகுதிகளில் நடந்து சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். முன்னதாக, நகர திமுக செயலாளர் வினோத்குமார் தலைமையில், எஸ்.ஜெகத்ரட்சகன் எம்பிக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.

அப்போது, திருத்தணி தொகுதி பொறுத்தவரை எப்போதும் திமுகவுக்கு வாக்காளர்கள் பெரும் ஆதரவு தந்து வாக்களித்து வருகின்றனர். இப்பகுதியில் வளர்ச்சி திட்டப் பணிகள் வேகமாக மேற்கொண்டு, பொதுமக்களின் பிரச்னைகள் காலதாமதமின்றி உடனுக்குடன் தீர்த்து வைக்கப்படும் என்று எஸ்.ஜெகத்ரட்சகன் எம்பி கூறினார். நிகழ்வின்போது மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ம.கிரண், நகராட்சி துணை தலைவர் சாமிராஜ், நகரமன்ற உறுப்பினர்கள் ஷியாம் சுந்தர், அசோக்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post பொதுமக்களின் பிரச்னைகள் உடனுக்குடன் தீர்த்து வைக்கப்படும்: வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து எஸ்.ஜெகத்ரட்சகன் எம்பி உறுதி appeared first on Dinakaran.

Tags : S. Jagadratsakan ,Thiruthani ,Tamil Nadu ,
× RELATED திருத்தணியில் கனமழை ரயில் நிலையம்...