×

ராஜஸ்தானில் சிக்கியது: பாக்.கில் இருந்து டிரோனில் வந்த 12 கிலோ ஹெராயின் பறிமுதல்


ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் எல்லைப்பாதுகாப்பு படையினர் அனுப்கர் பகுதியில் கைலாஸ் சோதனை சாவடி அருகே நேற்று டிரோன் ஒன்று பறந்து வந்துள்ளது. இதனைபார்த்து சந்தேகமடைந்த எல்லைப்பாதுகாப்பு படையினர் டிரோன் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதனைதொடர்ந்து அந்த பகுதியில் வீரர்கள் நடத்திய தேடுதல் வேட்டையில் 6கிலோ எடை கொண்ட இரண்டு ஹெராயின் பாக்கெட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் சமேஜா கோதி காவல்நிலைய பகுதியில் டிரோனில் இருந்து வீசப்பட்ட பார்சலை எடுக்க வந்த கடத்தல் கும்பல் துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பி சென்றது.

அங்கிருந்து ரூ.6கிலோ எடையுள்ள இரண்டு ஹெராயின் பாக்கெட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்டுள்ள 12கிலோ ஹெராயின் போதைப்பொருளின் சர்வதேச மதிப்பு ரு.60கோடியாகும். இவை பாகிஸ்தானில் இருந்து கும்பலால் டிரோன் மூலம் கடத்தி வரப்பட்டுள்ளது.

The post ராஜஸ்தானில் சிக்கியது: பாக்.கில் இருந்து டிரோனில் வந்த 12 கிலோ ஹெராயின் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Rajasthan ,Dron ,Pak ,Jaipur ,Kailas ,Border Security Force ,Anupgarh ,Pakistan ,
× RELATED பீகார், ராஜஸ்தானில் நீட் வினாத்தாள்...