×

புரஸ்கார் விருதுக்கு தேர்வு; யூமா வாசுகி – லோகேஷ் ரகுராமனுக்கு முதல்வர் வாழ்த்து

சென்னை: மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி: நாவல், கவிதை, சிறுகதை என அனைத்து வடிவங்களிலும் தமிழிலக்கியத்தில் தனி அடையாளத்துடன் பயணித்து வருபவர் யூமா வாசுகி. ஏற்கனவே சிறந்த மொழி பெயர்ப்பிற்கான சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ள அவர், தற்போது ‘தன்வியின் பிறந்தநாள்’ நூலுக்காக பால சாகித்ய புரஸ்கார் விருதுக்கு தேர்வாகி இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

தமிழில் இன்னும் வளம்பெற வேண்டிய சிறார் இலக்கிய வகைமைக்கு அவர் ஆற்றிவரும் பாராட்டுக்குரிய பங்களிப்புக்கான உரிய அங்கீகாரம்தான் இந்த விருது. அதேபோல், காவிரிக்கரையில் இருந்து மற்றுமொரு இலக்கிய வரவாக தடம் பதித்து, ‘விஷ்ணு வந்தார்’ சிறுகதை தொகுப்பிற்காக யுவ புரஸ்கார் விருதுக்கு தேர்வாகியுள்ள நம்பிக்கைக்குரிய இளைஞர் லோகேஷ் ரகுராமனுக்கும் பாராட்டுகள். இவ்வாறு கூறியுள்ளார்.

The post புரஸ்கார் விருதுக்கு தேர்வு; யூமா வாசுகி – லோகேஷ் ரகுராமனுக்கு முதல்வர் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Yuma Vasuki ,Lokesh Raguraman ,Chennai ,M.K.Stalin ,Tanvi ,
× RELATED ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு,...