×

பக்ரீத் பண்டிகையையொட்டி ₹15 கோடிக்கு ஆடுகள் விற்பனை

சென்னை: சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகேயுள்ள கொங்கணாபுரத்தில் சனி சந்தை இன்று கூடியது. நாளை மறுநாள் (17ம் தேதி) பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி, சந்தையில் 16 ஆயிரம் ஆடுகள் ₹9 கோடிக்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதேபோல், பக்ரீத் பண்டிகையையொட்டி நாமக்கல் திருச்செங்கோடு ரோட்டில் உள்ள வாரச் சந்தையில் இன்று ஆடுகள் விற்பனை அமோகமாக நடந்தது.

இன்று ஒரே நாளில் ₹1.50 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதேபோல் திருச்சி சமயபுரம், தாயனூர் சந்தைகளில் இன்று ரூ.2 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானது. இதேபோல், கடலூர் மாவட்டம், வடலூரில் நடந்த ஆட்டு சந்தையில் ரூ.2.5 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகி உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post பக்ரீத் பண்டிகையையொட்டி ₹15 கோடிக்கு ஆடுகள் விற்பனை appeared first on Dinakaran.

Tags : BHAKRIT FESTIVAL ,Chennai ,Saturn Market ,Konganapuram ,Idipadi, Salem District ,Bakhrit festival ,Bakrit ,Namakkal ,
× RELATED போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு...