×

அருந்ததி ராய் மீதான உபா சட்டத்தை ரத்து செய்க: ஜவாஹிருல்லா வலியுறுத்தல்

சென்னை: சமூக செயற்பாட்டாளர் அருந்ததி ராய் மீதான உபா சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார். 2010-ல் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று அருந்ததி ராய் பேசியிருந்தார். 14 ஆண்டுக்கு பின் அருந்ததி ராய் மீது கொடும் சட்டத்தை பிரயோகிப்பது ஒன்றிய அரசின் காழ்ப்புணர்வை வெளிக் காட்டுகிறது. சமூக அமைதியை சீர்குலைக்கும் வகையில் பேசியுள்ள பாஜகவினர் மீது இதுவரை சாதாரண கைது நடவடிக்கை கூட இல்லை. உபா சட்டத்தின் கீழ் 97% பேர் நீண்ட சிறைவாசத்துக்குப் பிறகும் குற்றம் நிரூபிக்கப்படாமல் உள்ளனர். உலக பத்திரிகை சுதந்திர குறியீட்டில் இந்தியா தொடர் சரிவைச் சந்தித்து வருகிறது. சமூக செயற்பாட்டாளர்களை அச்சுறுத்தும் வகையில் உபா சட்டத்தை ஒன்றிய அரசு பயன்படுத்துவது கண்டனத்துக்குரியது என்றும் அவர் தெரிவித்தார்.

The post அருந்ததி ராய் மீதான உபா சட்டத்தை ரத்து செய்க: ஜவாஹிருல்லா வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Jawahirulla ,Chennai ,Humanist People's Party ,UBA ,Arundati Rai ,
× RELATED எதிர்க்கட்சியினரின் பல்வேறு...