×

செம்பனார்கோயில் அருகே கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

 

செம்பனார்கோயில், ஜூன் 15: செம்பனார்கோயில் அருகே கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடந்தது. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோயில் அருகே காளஹஸ்திநாதபுரத்தில் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை நோய் தடுப்பு திட்டம் மற்றும் 5-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமில் காளகஸ்திநாதபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட 350க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி மற்றும் கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும் கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு, கால்நடை வளர்ப்போருக்கு கால்நடை பராமரிப்பு குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. முகாமில் கால்நடை மருத்துவ உதவி இயக்குநர் அன்பரசன், ரிலையன்ஸ் பவுண்டேஷன் திட்ட மேலாளர் மெய்கண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post செம்பனார்கோயில் அருகே கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் appeared first on Dinakaran.

Tags : Vomari ,Cempanarkoil ,Cempanarcoil ,Animal Disease Prevention Programme ,District Veterinary Care Department ,Kalahastinathapuram ,Mayiladuthura District Darangambadi Taluga ,Dinakaran ,
× RELATED ஆக்கூர் ஆதிநாராயண பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்