×

சின்னதாராபுரம் அருகே அரசு பஸ் மீது பைக் மோதி தம்பதியினர் காயம்

 

க.பரமத்தி, ஜூன் 15: சின்னதாராபுரம் அருகே அரசு பேருந்து மீது பைக் மோதிய விபத்தில் தம்பதியினர் காயம் குறித்து சின்னதாராபுரம் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் அடுத்த சின்னதாராபுரம் அருகே பெரியபுளியம்பட்டியை சேர்ந்தவர் சாமியப்பன்(70), மனைவி சரஸ்வதி(63) ஆகிய இருவரும் பைக்கில் புறப்பட்டு செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல சின்னதாராபுரம் பகுதியில் இருந்து தென்னிலை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பைக்கை இயக்கியுள்ளார்.

விநாயகர் கோவில் அருகே வந்த போது எதிர்பாராதவிதமாக முன்னால் சென்ற அரசு பேருந்து மீது பைக் மோதியது. இதில் சரஸ்வதிக்குலேசான காயமும் சாமியப்பனுக்கு படுகாயம் ஏற்பட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்றனர். பிறகு சாமியப்பன் மேல்சிகிச்சைகாக கோவை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு திவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து அரசு பேருந்து ஓட்டுனர் செல்வராஜ்(37)கொடுத்த புகாரின் பேரில் சின்னதாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சின்னதாராபுரம் அருகே அரசு பஸ் மீது பைக் மோதி தம்பதியினர் காயம் appeared first on Dinakaran.

Tags : Chinnadharapuram ,K. Paramathi ,Samiyappan ,Saraswathi ,Periyapuliyampatti ,Karur ,Dinakaran ,
× RELATED மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி ஒன்றியக்குழு கூட்டம்