×

அரசு பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாமக்கல், ஜூன் 15: நாமக்கல் அரசு ஆண்கள் தெற்கு மேல்நிலைப்பள்ளியில், சமூக நலத்துறை சார்பில், மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தை திருமணம் தடுப்பு, போக்சோ சட்டங்கள், மாணவர்களுக்கு அரசின் மூலம் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் குறித்து, சமூக நலத்துறை ஒருங்கிணைப்பாளர் மகாலெட்சுமி விளக்கினார். இதில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் ராமு மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

The post அரசு பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Namakkal Government Boys South Higher Secondary School ,Social Welfare Department ,Dinakaran ,
× RELATED பஸ் டிரைவரை கொன்று உடலை ஏரியில்...