×

பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரிக்கு வந்த வாலிபர் திடீர் மாயம்

கிருஷ்ணகிரி, ஜூன் 15: பெங்களூரு வையாலிக்காவல் பகுதியைச் சேர்ந்தவர் அசோக்(40). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த 7ம் தேதி பஸ் மூலம் கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்திற்கு வந்தார். அங்கு திடீரென மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் தண்ணீர் தெளித்து மயக்கம் தெளிய வைத்து, டீ மற்றும் சாப்பாடு வாங்கி கொடுத்துள்ளனர். விசாரித்ததில் தனது தம்பி ஆனந்த் என்பவரின் செல்போன் எண்ணை தெரிவித்துள்ளார். உடனே, அவரை தொடர்பு கொண்டு விபரத்தை தெரிவித்துள்ளனர். இதையடுத்து, ஆனந்த் புறப்பட்டு கிருஷ்ணகிரி பஸ் நிலையம் வந்தார். ஆனால், அங்கு அசோக் இல்லாததால் பல்வேறு இடங்களில் தேடினார். ஆனால், அவர் கிடைக்காததால் கிருஷ்ணகிரி டவுன் போலீசில் நேற்று புகார் தெரிவித்தார். இதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

The post பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரிக்கு வந்த வாலிபர் திடீர் மாயம் appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Bengaluru ,Ashok ,Vayalikaval ,Krishnagiri New Bus Station ,
× RELATED வேட்டி அணிந்து வந்தவரை தடுத்த பெங்களூரு மால் ஒருவாரம் மூடல்