×

இந்தியாவில் பாஜ கூட்டணி 21 இடத்தில் டெபாசிட் போன ஒரே மாநிலம் தமிழ்நாடு: வர்த்தக அணி செயலாளர் காசிமுத்து மாணிக்கம் தாக்கு

சென்னை: பாஜ மட்டுமே 11, கூட்டணி 10 என 21 இடத்தில் டெபாசிட் போன ஒரே மாநிலமும் தமிழ்நாடு தான். இந்தியாவில் ஒரு மாநிலத்தின் மொத்த சீட்டையும், ஒரு சீட் கூட விடாது இந்தியா கூட்டணி பெற்றது என்றால் அதுவும் தமிழ்நாட்டில் மட்டும்தான் என்று திமுக வர்த்தக அணி செயலாளர் காசிமுத்து மாணிக்கம் கூறினார். சென்னை கிழக்கு மாவட்ட வர்த்தக அணி சார்பில் கொளத்தூரில் நடந்த கூட்டத்திற்கு மாவட்ட துணை அமைப்பாளர் கங்கா ஆர்.சுரேஷ் தலைமை வகித்தார்.

இதில், திமுக வர்த்தக அணி செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம் பேசியதாவது: தமிழக பாஜவை பொறுத்தவரை இந்த தேர்தலில் நிதி ஏராளமாக கொடுக்கப்பட்டது. பிரதமர் 8 முறை பிரசாரம் செய்தார் என்றாலும் ஒரு இடத்திலும் வெற்றி பெற முடியவில்லை. இந்தியாவில் ஒரு மாநிலத்தில் பாஜ மட்டுமே 11 இடத்தில் டெபாசிட் இழந்ததோடு, கூட்டணியில் 10 என 21 இடத்தில் டெபாசிட் போன ஒரே மாநிலமும் தமிழ்நாடு தான்.
இந்தியாவில் ஒரு மாநிலத்தின் மொத்த சீட்டையும், ஒரு சீட் கூட விடாது இந்தியா கூட்டணி பெற்றது என்றால் அதுவும் தமிழ்நாட்டில் மட்டும் தான். அது மு.க.ஸ்டாலினின் ஆட்சிக்கு கிடைத்த வெற்றி. 1995ல் 5 சீட் தமிழகத்தில் பெற்ற பாஜ 2014ல் 1 சீட் பெற்ற பாஜ இன்று ஜீரோ ஆகியுள்ளது.

கடவுளே கூட 5 ரவுண்டு வரை பின் தங்கினார் என்பதை புரிந்து இனி வரும் காலத்திலாவது ஈ.டி ஐ.டி, சி.பி.ஐ என எதிர்கட்சி அரசியல்வாதிகள் மீது திணிப்பதை நிறுத்துங்கள். இல்லையேல் 1998 போல பாஜ. ஆட்சி தானே கவிழ்ந்தது போல் மீண்டும் தேர்தலில் புதிய பிரதமர் வருவார். அவர் மு.க.ஸ்டாலின் கைகாட்டும் நபராக அமருவார். இவ்வாறு கவிஞர் காசிமுத்து மாணிக்கம் பேசினார். நிகழ்ச்சியில் 250 கோயில் அர்ச்சகர்களுக்கு ஒரு மாதத்திற்கு உரிய மளிகை சாமான், நிதி உதவி வழங்கப்பட்டது. கூட்டத்தில் அமைச்சர்கள் சேகர்பாபு. டி.ஆர்.பி.ராஜா, மேயர் பிரியா, பகுதி செயலாளர்கள் நாகராஜ், ஐசிஎப் முரளி, தேவ ஜவஹர், மகேஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

The post இந்தியாவில் பாஜ கூட்டணி 21 இடத்தில் டெபாசிட் போன ஒரே மாநிலம் தமிழ்நாடு: வர்த்தக அணி செயலாளர் காசிமுத்து மாணிக்கம் தாக்கு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,BJP alliance ,India ,Kasimuthu Manickam Thakku ,Chennai ,BJP ,
× RELATED பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவையும்,...