×

சுயநலத்தோடு சிந்திக்க வேண்டாம் கட்சியை காப்பாற்ற அனைவரும் கூடி முடிவெடுக்க வேண்டும்: இபிஎஸ்சுக்கு ஓபிஎஸ் மறைமுக அழைப்பு

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக பிளவுற்று கிடக்கும் இதே நிலையோடு, நடைபெற இருக்கின்ற விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலை எதிர்கொண்டு, 16வது தொடர் தோல்வியை வரவு வைத்து கொள்வதா, இல்லை ஒன்றுபட்ட அதிமுக என்கிற கம்பீர மிடுக்கோடு கட்சியை களமிறக்கி 2019ம் ஆண்டு இதே விக்கிரவாண்டி தொகுதியில் நாம் ஈட்டிய அன்றைய அதே இடைத் தேர்தல் வெற்றியை மீண்டும் நிலைநாட்டி கழகத்தை வெற்றி பாதைக்கு அழைத்து வர போகிறோமா என்கிற ஏக்கம் நிறைந்த எதிர்பார்ப்பு தொண்டர்களிடம் ததும்பி நிற்கிறது.

எனவே, கட்சி ஒன்றுபட்டால் தங்கள் பிடி தளர்ந்து போகுமோ என சுயநலத்தோடு சிந்திக்காமல் கட்சியை கைப்பற்றி கொள்வதினும் கட்சியை காப்பாற்றுவதே முக்கியம் என்கிற பெருந்தன்மையிலான முடிவினை அனைவரும் கூடி எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post சுயநலத்தோடு சிந்திக்க வேண்டாம் கட்சியை காப்பாற்ற அனைவரும் கூடி முடிவெடுக்க வேண்டும்: இபிஎஸ்சுக்கு ஓபிஎஸ் மறைமுக அழைப்பு appeared first on Dinakaran.

Tags : OPS ,EPS ,Chennai ,Former Chief Minister ,O. Panneerselvam ,AIADMK ,Vikravandi Assembly Constituency ,Kambeera ,Dinakaran ,
× RELATED சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரனுக்கு...