×

உதவி வனப்பாதுகாவலர் பதவிக்கான இறுதி தேர்வு முடிவு வெளியீடு: முதல் இடத்தை பிடித்தார் மாணவி கீர்த்தனா

சென்னை: உதவி வனப்பாதுகாவலர் பதவிக்கான இறுதி தேர்வு முடிவை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதில் முதல் இடத்தை மாணவி கீர்த்தனா பிடித்து அசத்தியுள்ளார். தமிழ்நாடு வனப்பணியில்(குரூப் 1ஏ) உதவி வனப்பாதுகாவலர் பணியில் காலியாக உள்ள 9 காலி பணியிடங்களை நிரப்பும் பொருட்டு டிஎன்பிஎஸ்சி கடந்த 13.12.2022 அன்று வெளியிட்டது. தொடர்ந்து தொடர்ந்து அதே ஆண்டு ஏப்ரல் 30ம் தேதி முதல்நிலை தேர்வு நடத்தப்பட்டது. முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதன்மை எழுத்து தேர்வு அக்டோபர் 13 முதல் 17ம் தேதி வரை நடந்தது.

சென்னையில் மட்டும் இந்த தேர்வு நடந்தது. இதில் 25 பேர் நேர்முக தேர்விற்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கான நேர்முக தேர்வு நடந்தது. நேர்முக தேர்வு முடிந்ததையடுத்து, தேர்வர்கள் மெயின் தேர்வு, நேர்முக தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் இறுதி தேர்வு முடிவை டிஎன்பிஎஸ்சி தனது இணையதளமான(www.tnpsc.gov.in) வெளியிட்டுள்ளது.
இது குறித்து சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிர்வாக இயக்குனர் வைஷ்ணவி சங்கர் கூறியதாவது: உதவி வனப்பாதுகாவலர் தேர்வுக்கான நேர்காணல் முடிவடைந்ததையடுத்து இறுதி தேர்வு முடிவை டிஎன்பிஎஸ்சி இணையதளமான www.upsc.gov.in வெளியிட்டது.

9 இடத்துக்கு நடத்தப்பட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் 5 பேர் சங்கர் ஐஏஎஸ் அகடாமி மாணவர்கள். தமிழ்நாட்டில் முதல் இடத்தை கீர்த்தனா என்ற மாணவி பிடித்துள்ளார். இவர் எங்கள் மையத்தில் படித்தவர் ஆவர். முறையே 3வது, 4வது, 6வது இடத்தையும் எங்கள் மாணவர்கள் பிடித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். டிஎன்பிஎஸ்சி குருப்-1 ஏ தேர்வு மூலமாக தமிழக அரசின் வனத்துறையில் உதவி வனப் பாதுகாவலர் பணியில் சேருவோர் குறிப்பிட்ட ஆண்டுகளில் ஐஎப்எஸ் (இந்திய வனப்பணி) அதிகாரி ஆகலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

The post உதவி வனப்பாதுகாவலர் பதவிக்கான இறுதி தேர்வு முடிவு வெளியீடு: முதல் இடத்தை பிடித்தார் மாணவி கீர்த்தனா appeared first on Dinakaran.

Tags : Keerthana ,Chennai ,TNPSC ,Kirthana ,Tamil Nadu Forest Service ,Dinakaran ,
× RELATED திருப்பூர் மாணவி முதலிடம்