×

இது தமிழ்நாட்டுப் பள்ளிக்கல்வித் துறையின் பொற்காலம் என வரலாறு பேச வேண்டும்! : முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு

சென்னை : இது தமிழ்நாட்டுப் பள்ளிக்கல்வித் துறையின் பொற்காலம் என வரலாறு பேச வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் “ஐம்பெரும் விழா” நடைபெற்று வருகிறது. நேரு உள்விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “ஐம்பெரும் விழா” நடைபெறுகிறது. இந்த விழாவில் தமிழ் பாடத்தில் 100/100 மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர்களுடன் முதலமைச்சர் புகைப்படம் எடுத்துக் கொண்டார். பொது தேர்வில் தமிழ் பாடத்தில் 100/100 மதிப்பெண் எடுத்த மாணவர்கள் 43 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் அரசுப்பள்ளிகளில் 22,931 திறன்மிகு வகுப்பறைகளை (SMART CLASS) முதல்வர் தொடங்கி வைத்தார். பொது தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 1761 அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி (TAB) வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.மேலும் 7 வது தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், படிங்க, படிங்க, படிச்சுக்கிட்டே இருங்க, படிப்பு ஒன்றுதான் யாராலும் பறிக்க முடியாது சொத்து எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில்,”மாணவச் செல்வங்களே…

உங்கள் கல்விக்கு எந்தத் தடையும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது என் பொறுப்பு!

எதிலும் கவனத்தைச் சிதறவிடாமல், எங்கேயும் தேங்கி நின்றுவிடாமல் தொடர்ந்து படிக்க வேண்டும் என்பதைத்தான் பதிலுக்கு உங்களிடம் நான் எதிர்பார்க்கிறேன்!

நமது திராவிடன் மாடல் அரசில் தமிழ்நாட்டு மாணவர்கள் உயர உயரப் பறக்க வேண்டும்! இது தமிழ்நாட்டுப் பள்ளிக்கல்வித் துறையின் பொற்காலம் என வரலாறு பேச வேண்டும்!

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post இது தமிழ்நாட்டுப் பள்ளிக்கல்வித் துறையின் பொற்காலம் என வரலாறு பேச வேண்டும்! : முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Principal Mu K. Stalin ,Chennai ,K. Stalin ,Imperum Ceremony ,Nehru Indoor Sports Arena ,Chief Minister ,Nehru Inland Sports Arena ,Principal ,Mu K. Stalin ,
× RELATED பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவையும்,...