×

தங்கம் வாங்க இது தான் சரியான நேரம்: 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.53,200க்கு விற்பனை.!

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.53,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.6,650க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ரூ.95க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. அவ்வப்போது லோசாக விலை சரிந்தும் வருகிறது.

கடந்த வாரம் ரூ. 54,000-ஐ தொட்ட தங்கத்தின் விலை, படிப்படியாக குறைந்த நிலையில், இந்த வாரம் தொடக்கம் முதல் சிறிது குறைந்தும் அதிகரித்தும் வருகிறது. வியாழக்கிழமை ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 53,280-ஆக இருந்தது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.53,200-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.10 குறைந்து ரூ.6,650-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.20 காசுகள் குறைந்து ரூபாய் 95.00-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.95,000-க்கும் விற்பனையாகிறது.

The post தங்கம் வாங்க இது தான் சரியான நேரம்: 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.53,200க்கு விற்பனை.! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED மதுரவாயலில் புதிதாக கட்டப்பட்டு...