×

புதுச்சேரி அமைச்சரின் மகளுக்கு சொந்தமான இடத்தில் சோதனை: சந்தன ஆயில் நிறுவன அதிபர் நாசருக்கு வனத்துறை சம்மன்

சேலம்: சேலத்தில் 1.5 டன் சந்தன கட்டைகள் பறிமுதல் செய்த விவகாரத்தில் புதுச்சேரி சந்தன ஆயில் நிறுவனத்தில் வனத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனை நடத்தியதில் 7 டன் சந்தன மரக்கட்டைகளை சிறிய சிறிய கட்டைகளாக பாக்கெட் செய்து மூட்டையில் பதுக்கி வைத்தது அம்பலமமாகியுள்ளது. வில்லியனூர் அருகே புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் ஜெயக்குமாரின், மகள் பிரேமாவின் இடத்தில் சந்தன ஆயில் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. நிலத்தை கேரளாவைச் சேர்ந்த நாசர் என்பவர் குத்தகைக்கு வாங்கி, இந்தோ அப்ரோ எசன்ஷியல் ஆயில் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் நடத்தி வருகிறார்.

வெளிநாடுகளில் இருந்து சந்தன கட்டைகள் இறக்குமதி செய்து எண்ணெய் எடுத்து மீண்டும் வெளிநாடுகளுக்கு எண்ணெயை ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் சேலம் பகுதியில் சந்தன கட்டைகள் ஏற்றி சென்ற வாகனத்தை வனத்துறை அதிகாரிகள் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். கேரளாவில் இருந்து புதுச்சேரி உளவாய்க்கால் பகுதியில் உள்ள கம்பெனியில் இருந்து ஏற்றி செல்வதாக தெரிவித்துள்ளனர். சந்தன கட்டைகள் பறிமுதல் தொடர்பாக சந்தன ஆயில் நிறுவனம் நடத்திவரும் நாசர் என்பவருக்கு தமிழ்நாடு வனத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. வனத்துறை சம்மனை தொடர்ந்து சந்தன ஆயில் நிறுவனம் நடத்தி வரும் நாசர், சேலம் வனத்துறை அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு ஆஜராகிறார்.

The post புதுச்சேரி அமைச்சரின் மகளுக்கு சொந்தமான இடத்தில் சோதனை: சந்தன ஆயில் நிறுவன அதிபர் நாசருக்கு வனத்துறை சம்மன் appeared first on Dinakaran.

Tags : Puducherry ,minister ,Forest ,Sandalwood oil ,Nasser ,Salem ,Forest department ,Puducherry Sandalwood Oil Company ,Dinakaran ,
× RELATED புதுச்சேரி லாஸ்பேட்டையில் கிரிக்கெட் விளையாடிய இளைஞர் உயிரிழப்பு!!