×

2016ம் ஆண்டுக்கு முந்தைய ஊதிய விகிதத்தில் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 9% உயர்வு: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: 2016-ம் ஆண்டுக்கு முந்தைய ஊதிய விகிதத்தில் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, மாநில அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 1.1.2024 முதல் 9% உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டுக்கு முந்தைய ஊதிய விகிதத்தில் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் தகுதியுள்ள அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 1.1.2024 ஆம் தேதி முதல் 9% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ஜனவரி முதல் மே வரையிலான அகவிலைப்படி நிலுவைத்தொகை மின்னணு தீர்வு சேவை மூலம் வழங்கப்படும். மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி வீதம், அடிப்படை ஊதியம், அகவிலை ஊதியத்தில் 239% ஆக உயர்த்தி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 12 ஆம் தேதி தமிழக அரசு ஊழியர்களுக்கு 4 சதவிகித அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். மக்களவை தேர்தலுக்கு முன்பாக வெளியான இந்த அறிவிப்பு அரசு ஊழியர்களிடையே மகிழ்ச்சியை உண்டாக்கியது குறிப்பிடத்தக்கது.

The post 2016ம் ஆண்டுக்கு முந்தைய ஊதிய விகிதத்தில் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 9% உயர்வு: தமிழ்நாடு அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,Chennai ,Tamil Nadu Government ,Dinakaran ,
× RELATED தமிழக அரசின் அனுமதி இல்லாத ஆம்னி...