×

தமிழகத்தின் முதலாவது சமத்துவபுரம்; கூடுதல் ஆட்சியர் ஆய்வு

திருமங்கலம், ஜூன் 14: தமிழகத்தின் முதலாவது சமத்துவபுரமான, திருமங்கலம் சமத்துவபுரத்தில் கூடுதல் ஆட்சியர் மோனிகா ரானா நேற்று ஆய்வு செய்தார்.தமிழ்நாட்டில் முதலாவது சமத்துவபுரம் திருமங்கலத்தை அடுத்த காமாட்சிபுரம் ஒன்றியத்தில் முன்னாள் முதல்வர் கலைஞரால் கடந்த 1989ல் திறந்து வைக்கப்பட்டது. இந்த சமத்துவபுரத்தில் திமுக ஆட்சியில் தொடர்ச்சியாக பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. தற்போது சமத்துவபுரத்தில் வசிக்கும் பொதுமக்களின் வசதிக்காக புதியதாக, 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத்தொட்டி, புதிய ரேஷன்கடை உள்ளிட்டவை கட்டப்பட்டு வருகிறது.இதன்படி, சமத்துவபுரத்தில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை நேற்று மதுரை கூடுதல் ஆட்சியர் மோனிகா ரானா நேரில் ஆய்வு செய்தார். மேல்நிலைத்தொட்டி பணிகளை விரைவில் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரவும், சமத்துவபுரத்தில் உள்ள பூங்காவில் அதிகளவில் மரக்கன்றுகளை நட்டுவைக்கும்படியும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். கூடுதல் ஆட்சியருடன் திருமங்கலம் பிடிஓ வில்சன் மற்றும் பொறியாளர்கள் இந்த ஆய்வின்போது உடனிருந்தனர்.

The post தமிழகத்தின் முதலாவது சமத்துவபுரம்; கூடுதல் ஆட்சியர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Samathuvapuram ,Tamil Nadu ,Thirumangalam ,Monika Rana ,Tirumangalam Samathuvapuram ,Chief Minister ,Karanchi ,Kamachipuram ,Samatthupuram ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டை சமத்துவபுரத்தில் பள்ளி பூட்டை உடைத்து பொருட்கள் சூறை