×

பெண்ணை கடித்து குதறிய வெறிநாய்களை பிடித்து சென்ற தனியார் அமைப்பினர்

 

திருப்பூர், ஜூன் 14: திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வெறி நாய்கள் அதிகரித்து உள்ளது. கடந்த சில நாட்களாக வெறிநாய்கள் கடிதத்தில் முதியவர்கள் முதல் குழந்தைகள் வரை பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று திருப்பூர் மாநகராட்சி 36வது வார்டு குமரன் சாலையை சோந்த பேபி என்ற பெண்ணை வெறி நாய்கள் தாக்கியதில், படுகாயமடைந்தார். அவரை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் தனியார் அமைப்பினரிடம் கொடுத்த புகாரின் பேரில் குமரன் சாலையில் உள்ள குடியிருப்பு பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரிந்த 6 வெறி நாய்களை தனியார் அமைப்பினர் லாபகமாக பிடித்து சென்றனர். இதனையடுத்து அப்குதியை சேர்ந்த பொது மக்கள் தனியார் அமைப்பினருக்கு நன்றி தெரிவித்தனர்.

The post பெண்ணை கடித்து குதறிய வெறிநாய்களை பிடித்து சென்ற தனியார் அமைப்பினர் appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Tirupur Corporation ,Tirupur Municipal Corporation ,36th Ward Kumaran ,Dinakaran ,
× RELATED ப்ரண்ட்லைன் பள்ளியில் மாணவர் தலைவர்கள் பதவியேற்பு விழா