திருப்பூர், ஜூன் 14: திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருகின்ற 21ம் தேதி சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள 4வது தளத்தில் அறை எண் 439இல் வருகின்ற 21ம் தேதி காலை 10:30 மணிக்கு நடைபெற உள்ளது.
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் நடைபெறும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் தனியார் துறை வேலை அளிப்பவர்கள் கலந்து கொண்டு வேலை நாடுபவர்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாமில் வேலை தேடுபவர்கள் தங்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை மற்றும் சுய தகவல் படிவத்துடன் கலந்து கொள்ளலாம். வேலை அளிப்பவரும் தங்களுக்கு தேவையான காலிப் பணியிடங்களை நிரப்பிட தங்கள் வருகையை வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
எழுத படிக்க தெரிந்தவர்கள் முதல் முதுநிலை பட்டதாரிகள் வரை ஐடிஐ டிப்ளமோ படித்தவர்கள் மற்றும் தையல் பயிற்சி பெற்றவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். வேலை தேடுபவர்களும், வேலை அளிப்பவர்களும் www..tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமிற்கு வரும்போது புதிய பதிவு மற்றும் பதிவு புதுப்பித்தல் செய்து கொள்ளலாம். தனியார் துறைகளில் வேலையில் சேர்வதால் தங்களின் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்படாது. இப்பணி முற்றிலும் இலவசமானது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post கலெக்டர் அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் appeared first on Dinakaran.