×

பெரம்பலூர் மாவட்டத்தில் மெக்கானிக் கடையில் 2 குழந்தை தொழிலாளர் மீட்பு

 

பெரம்பலூர், ஜூன் 14: குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்கும் விதமாக, மாவட்டம் முழு வதும் குழந்தைத் தொழி லாளர்கள் கடைகளில் பணியில் அமர்த்தப்பட்டுள் ளனரா என சோதனை மேற்கொண்டு குன்னம் மெக்கானிக் கடை யில் 2 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்களை முற்றிலும் ஒழிக்க பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளா தேவி பல்வேறு நடவடிக்கைகள் மேற் கொண்டு வருகிறார்.

இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கும் விதமாக மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளாதேவி உத்தரவின் பேரில் நேற்று பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குழந்தை தொழிலாளர்கள் யாரே னும் கடைகளில் பணி புரிகின்றனாரா என்று தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் மூர்த்தி, தொழிலாளர் நலத்துறை ஆய்வாளர் ராணி, குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்எஸ்ஐ மருத முத்து, டிசிபிஓ சட்ட ஆலோசகர் கோபிநாத் ஆகியோர் இணைந்து, கடைகள் மற்றும் கல்குவாரிகள் போன்ற இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.

இதில் குன்னம் கடைவீதியில் ஒரு மெக்கானிக் கடையில் பணியமர்த்தப்பட்டிருந்த குழந்தை தொழிலாளர்கள் இருவரை மீட்டு குழந்தைகள் நல அலகில் ஒப்படைத் தனர். மேலும் பள்ளியில் இடைநின்ற மாணவர்கள் எவரேனும் உள்ளனரா என்றும் மேற்படி குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.

The post பெரம்பலூர் மாவட்டத்தில் மெக்கானிக் கடையில் 2 குழந்தை தொழிலாளர் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Perambalur district ,Perambalur ,Kunnam mechanic shop ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட தாலுகாக்களில்...