×

லாரி மோதி பஸ் கவிழ்ந்ததில் 3 பேர் பலி

தென்காசி: தென்காசியில் இருந்து நேற்று மதியம் 2 மணியளவில் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. இலத்தூர் ரவுண்டானா பகுதியில் சென்ற போது, கேரளாவில் இருந்து சுரண்டைக்கு கனிமம் ஏற்றிச் செல்லும் டிப்பர் லாரி, பஸ் மீது மோதியது. இதில் பஸ் நடுரோட்டில் கவிழ்ந்தது.

பஸ்சின் அடியில் சிக்கிய சங்கரன்கோவில் லட்சுமியாபுரத்தைச் சேர்ந்த செல்வி (55), தென்காசியை அடுத்த சிவராமபேட்டையை சேர்ந்த அழகு சுந்தரி (30) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். அழகு சுந்தரியின் 4 வயது ஆண் குழந்தை அட்சய பாலா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியின் இறந்தான். பஸ்சிலிருந்த 16க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.

The post லாரி மோதி பஸ் கவிழ்ந்ததில் 3 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Tenkasi ,Srivilliputhur ,Kerala ,Surandi ,Ilattur Roundabout ,Dinakaran ,
× RELATED தென்காசியில் தெரு நாய் கடித்ததில் 8 வயது சிறுமி மருத்துவமனையில் அனுமதி!!