×

இமாச்சல பிரதேச இடைதேர்தல் காங். பொறுப்பாளர்கள் நியமனம்

சிம்லா: இமாச்சல் பிரதேச சட்ட பேரவையில் சுயேச்சை எம்எல்ஏக்களான ஆஷிஷ் சர்மா(ஹமீர்பூர்- தொகுதி),ஹோஷியார் சிங்(டெஹ்ரா-தொகுதி),கே.எல்.தாக்குர்(நாலாகர் – தொகுதி) ஆகியோர் கடந்த மார்ச் 22ம் தேதி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். அன்றைய தினமே பாஜவில் சேர்ந்தனர்.

காலியாக உள்ள 3 தொகுதிகளுக்கு வரும் ஜூலை 10ல் இடைதேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் 3 தொகுதி இடைதேர்தலுக்கு பொறுப்பாளர்களை காங்கிரஸ் நியமித்துள்ளது.வேளாண்துறை அமைச்சர் சந்தர்குமார் , கல்வி அமைச்சர் ரோஹித் தாக்குர் ,தொழில்நுட்ப கல்வி அமைச்சர் ராஜேஷ் தர்மானி பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

The post இமாச்சல பிரதேச இடைதேர்தல் காங். பொறுப்பாளர்கள் நியமனம் appeared first on Dinakaran.

Tags : Himachal Pradesh ,Midterm Election ,Shimla ,Ashish Sharma ,Hamirpur ,Hoshiyar Singh ,Dehra ,K. L. THAKUR ,NALAGAR ,Himachal ,Pradesh ,
× RELATED நீர் பற்றாக்குறையால்...