×

சிக்கிமில் பயங்கர நிலச்சரிவு 6 பேர் பலி, 1500 பேர் சிக்கி தவிப்பு

காங்டாக்: சிக்கிம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. மாங்கன் மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக அங்கு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் பல வீடுகள் சேதமடைந்தன. சாலைகளில் பாறைகள் மற்றும் மண் குவியலால் போக்குவரத்து தடை பட்டுள்ளது. மழை வெள்ளத்தில் மின் கம்பங்கள் அடித்து செல்லப்பட்டன.

இதனிடையே பக்‌ஷெப் பகுதியில் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. இதுவரை 6 பேர் பலியாகி உள்ளனர். 1500 பேர் வெள்ளத்தில் சிக்கி தவிக்கின்றனர். இவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். சாலைகளில் குவிந்துள்ள மண் குவியல்களை அகற்றி போக்குவரத்தை சீர்செய்யும் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

The post சிக்கிமில் பயங்கர நிலச்சரிவு 6 பேர் பலி, 1500 பேர் சிக்கி தவிப்பு appeared first on Dinakaran.

Tags : Sikkim ,Kangtak ,Mangan district ,Dinakaran ,
× RELATED எம்எல்ஏவாக பதவியேற்ற அடுத்த நாளே...