×

முன்விரோதம் காரணமாக நள்ளிரவில் வீடு புகுந்து வாலிபர் வெட்டிக்கொலை: மர்ம கும்பலுக்கு போலீசார் வலை

காஞ்சிபுரம், ஜூன் 14: காஞ்சிபுரம் அருகே கோவிந்தவாடி அகரம் பகுதியில் முன்விரோதம் காரணமாக, நள்ளிரவில் வீடு புகுந்து வாலிபரை வெட்டிக்கொலை செய்த மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஞ்சிபுரம் மாவட்டம், கோவிந்தவாடி அகரம் காலனி பகுதியை சேர்ந்தவர் கோதண்டம் – சரிதா தம்பதியர். கோதண்டம் உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் லேப் டெக்னீஷியனாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு, 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் பார்வேந்தன் மீது 3க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. பார்வேந்தனின் உடன்பிறந்த தம்பியான சின்னையன் (எ) உதயநிதி (20), பிஎஸ்சி முடித்துவிட்டு கடந்த 4 நாட்களுக்கு முன்பு சிறுவாக்கம் பகுதியிலுள்ள தொழிற்சாலையில் பணியில் சேர்ந்துள்ளார். இவரின் நண்பர், படுநெல்லியை சேர்ந்த கிரி (22). இவர்களுக்கும், அதே பகுதியை சேர்ந்த ராஜாராம் என்பவரின் மகன் மணிகண்டனுக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 1 மணியளவில் மணிகண்டன், பகவதி, விக்கி உள்ளிட்ட 6 பேர், பார்வேந்தனின் வீட்டிற்கு சென்று கதவை தட்டியுள்ளனர். கதவை திறந்து வெளியில் வந்த தாய் சரிதாவை கத்தியை காட்டி மிரட்டிவிட்டு, உள்ளே படுத்திருந்த சின்னையன் என்ற உதயநிதியை கொடூரமாக தலை, கழுத்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில், படுகாயமடைந்த உதயநிதி ரத்தம் வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே தாய், தந்தை கண்முன்னே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையெடுத்து மணிகண்டன், பகவதி, விக்கி உள்ளிட்டோர் அங்கிருந்து கோவிந்தவாடி அகரம் அடுத்த படுநெல்லி கிராமத்திற்கு சென்று, அங்கு பெற்றோருடன் வாடகை வீட்டில் வசித்து வந்த ராமரின் மகன் கிரி என்பவரை கொலை செய்யும் நோக்கில் சராசரியாக வெட்டிவிட்டு தலைமறைவாகினர். இதில், படுகாயமடைந்த கிரியை, அக்கம் பக்கத்தினர் மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து, போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். ருவேறு, காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொலை, கொலை முயற்சி சம்பவங்கள் தொடர்பாக பாலுச்செட்டி மற்றும் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சின்னதுரை (எ) உதயநிதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை பிடிக்க, 4 தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

The post முன்விரோதம் காரணமாக நள்ளிரவில் வீடு புகுந்து வாலிபர் வெட்டிக்கொலை: மர்ம கும்பலுக்கு போலீசார் வலை appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Govindavadi Akaram ,Chipuram District ,
× RELATED இன்னுயிர் காப்போம் திட்டம் மூலம் ரூ.3.80...