×

துணை பிடிஓ.,க்களுக்கு பிடிஓவாக பதவி உயர்வு

சேந்தமங்கலம், ஜூன் 14: சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், துணை பிடிஓவாக பணியாற்றி வந்த செல்வி, பதவி உயர்வு பெற்று எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலக பிடிஓவாக நியமிக்கப்பட்டுள்ளார். இதே போல், கொல்லிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், துணை பிடிஓவாக பணியாற்றி வந்த சுரேஷ், பதவி உயர்வு பெற்று திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலக பிடிஓவாக நியமிக்கப்பட்டுள்ளார். பதவி உயர்வு பெற்றுள்ள அலுவலர்களுக்கு, உடன் பணியாற்றிய பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

The post துணை பிடிஓ.,க்களுக்கு பிடிஓவாக பதவி உயர்வு appeared first on Dinakaran.

Tags : Senthamangalam ,Selvi ,Senthamangalam Panchayat Union Office ,PTO ,Elachipalayam Panchayat Union Office ,Kollimalai panchayat union ,Dinakaran ,
× RELATED அரளிப்பூ விளைச்சல் அமோகம்