×

விழுந்தையம்பலத்தில் மீன் சந்தை கட்டிடம் திறப்பு

கருங்கல், ஜூன்14: கீழ்குளம் பேரூராட்சிக்குட்பட்ட விழுந்தையம்பலத்தில் மீன் சந்தை உள்ளது. இங்கு பல ஆண்டுகளாக மீன் வியாபாரம் செய்யக்கூடிய மீனவப் பெண்களின் நீண்ட நாள் கோரிக்கை மற்றும் விழுந்தையம்பலம் பகுதி பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தமிழக அரசு மாநில பதினொன்றாவது நிதிக்குழுவின் பேரூராட்சி நிதியின் கீழ் சுமார் பத்து லட்ச ரூபாய் மதிப்பீட்டில் மீன் சந்தை புதிதாக கட்டி முடிக்கப்பட்டது. இதை மக்கள் பயன்பாட்டுக்காக கீழ்குளம் பேரூராட்சி தலைவர் சரளா கோபால் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில் செயல் அலுவலர் ரகுநாதன் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் மார்கிரெட் மேரி, ஷோபா மற்றும் திமுக கிள்ளியூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பி கோபால், பேரூர் செயலாளர் எஸ் எம் கான், கிளைக் கழகச் செயலாளர்கள் ஜார்ஜ் வில்சன் ராபின், ஆல்பட்ராஜ், லிபின்தாஸ் உட்பட ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post விழுந்தையம்பலத்தில் மீன் சந்தை கட்டிடம் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Fallinghampalal ,KARANGAL ,LOWER KULAM DISTRICT ,Tamil Nadu government ,Falling Area ,Fish Market ,
× RELATED குழித்துறை மறைமாவட்ட பொது நிலையினர் அமைப்பு இந்தியா கூட்டணிக்கு ஆதரவு