×

பாடல்கள் மீது இளையராஜா எந்த உரிமையும் கோர முடியாது: சென்னை உயர்நீதிமன்றத்தில் எக்கோ நிறுவனம் வாதம்

சென்னை: பாடல்கள் மீது இளையராஜா எந்த உரிமையும் கோர முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் எக்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இசையமைப்பாளர் இளையராஜாவின் 4500 பாடல்களை பயன்படுத்துவதற்கு எக்கோ மற்றும் அகி உள்ளிட்ட இசை நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்திருந்தன. ஆனால் இந்த ஒப்பந்தம் கடந்த 2014 ஆம் ஆண்டுடன் முடிந்த நிலையில் காப்புரிமை பெறாமல் தனது பாடல்களை பயன்படுத்துவதாக இரு நிறுவனங்களின் மீதும் இளையராஜா வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தனி நீதிபதி தயாரிப்பாளர்களிடம் உரிமை பெற்று பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு உரிமை உள்ளதாகவும் , இளையராஜாவுக்கும் இந்த பாடல்கள் மீது தனிப்பட்ட தார்மீக சிறப்பு உரிமை இருப்பதாகவும் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து இளையராஜா மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது எக்கோ நிறுவனம், “ஊதியம் கொடுத்து இசையை பெறும் தயாரிப்பாளர் தான் முதல் காப்புரிமை உரிமையாளர்.

பதிப்புரிமை தொடர்பாக எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளாத இளையராஜா எந்த உரிமையும் கோர முடியாது. ஏ.ஆர்.ரஹ்மான், பதிப்புரிமையை யாருக்கும் வழங்குவதில்லை. ஆனால் இளையராஜா பட தயாரிப்பாளரிடம் தன் உரிமையை வழங்கி விட்டார். இளையராஜாவின் 4,500 பாடல்களை பயன்படுத்த உரிமை உள்ளது. இசையை திரித்தாலோ, பாடல் வரிகளை மாற்றினாலோ மட்டும் தான் தார்மீக உரிமை வரும்” எனக் கூறியுள்ளது. இளையராஜா தரப்பு வாதங்களுக்காக விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

The post பாடல்கள் மீது இளையராஜா எந்த உரிமையும் கோர முடியாது: சென்னை உயர்நீதிமன்றத்தில் எக்கோ நிறுவனம் வாதம் appeared first on Dinakaran.

Tags : ILAYARAJA ,ECHO INSTITUTE ,CHENNAI ,Chennai High Court ,Echo ,Agi ,Ilairaja ,
× RELATED தயாரிப்பாளர்களுடன் எந்த ஒப்பந்தமும்...