×

பக்ரீத் பண்டிகை அன்று பொது இடத்தில் ஆடு, மாடு பலியிட தடையில்லை: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: பக்ரீத் பண்டிகை அன்று பொது இடத்தில் ஆடு, மாடுகளை பலியிட தடை விதிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. பக்ரீத் பண்டிகையின்போது ஆடு, மாடுகளை மாநகராட்சி அனுமதிக்காத இடத்தில் பலியிட தடை விதிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது. பக்ரீத் பண்டிகையின் போது மாநகராட்சி அனுமதி இல்லாத இடங்களில் ஆடு மாடுகளை பலியிட தடை விதிக்க கோரி மனு அளிக்கப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் அருள் முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது, திருச்சி மாநகராட்சியில் ஆடு, மாடுகளை பலியிட 10 இடங்களில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மதரீதியான சடங்குகளில் கட்டுப்பாடு ஏதும் விதிக்க முடியாது என அரசு தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. இந்த நிலையில் வழக்கை விசாரித்த  நீதிபதிகள் பக்ரீத் பண்டிகையின் போது இஸ்லாமியர்கள் குர்பானி என்ற பெயரில் ஆடு மாடுகளை வாங்கி பலியிட்டு வருகின்றனர்.
17ஆம் தேதி பக்ரீத் கொண்டாடப்பட உள்ள சூழலில் வழக்கில் நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. ஆடு, மாடுகளை பலியிடும் சமூகத்தினரின் வாதங்களை கேட்காமல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது என கூறி உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.

The post பக்ரீத் பண்டிகை அன்று பொது இடத்தில் ஆடு, மாடு பலியிட தடையில்லை: ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Bakrit festival ,Madurai ,High Court ,Bakrit ,festival of Bakrit ,Bakrit… ,ICourt branch ,Dinakaran ,
× RELATED விடுப்பு கோரிய காவலரை டிஸ்மிஸ் செய்த உத்தரவு ரத்து: ஐகோர்ட் மதுரைக்கிளை