தேவையான பொருட்கள்
1/2 கப் கம்பு மாவு
¼ கப் உளுந்து மாவு
4 பச்சை மிளகாய்
சிறிய துண்டு இஞ்சி
கறிவேப்பிலை
தேவையான அளவு உப்பு
பொரிப்பதற்கு எண்ணெய்.
செய்முறை:
கம்பு மாவு, உளுந்து மாவு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து மிக்ஸியில் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அரைக்கவும். பின்னர் அதில் உப்பு சேர்த்து கை வைத்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும். அப்படி கலக்கினால்தான் மிகவும் மிருதுவான வடை கிடைக்கும். பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி ஸ்டவ்வில் வைத்து காய்ந்ததும் வடை மாவை எடுத்து நடுவில் ஓட்டை போட்டு எண்ணெயில் போட்டு இரண்டு முறை திருப்பி விட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்தால் கம்பு மாவுவடை தயார்!
The post கம்பு மாவு மெதுவடை appeared first on Dinakaran.