×

14 மாவட்ட கலெக்டர்களை தொடர்ந்து இன்று 2வது நாளாக 12 மாவட்ட ஆட்சி தலைவர்களுடன் ஆலோசனை.! தலைமை செயலாளர் தலைமையில் நடந்தது

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் 14 மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து 12 மாவட்ட ஆட்சி தலைவர்களுடன் தலைமை செயலாளர் இன்று ஆலோசனை நடத்தினார். தமிழகத்தின் வளர்ச்சி திட்டம் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சி தலைவர்களுடன் மூன்று நாட்கள் சென்னை, தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, நேற்று முன்தினம் காலை 9.30 மணிக்கு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 14 மாவட்ட ஆட்சி தலைவர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து இன்று கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், நீலகிரி ஆகிய 12 மாவட்ட ஆட்சி தலைவர்களுடன் சென்னை, தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையின்போது, ”மாவட்டங்களில் திட்டப்பணிகளை நல்ல தரத்துடன் விரைவாக முடிக்க வேண்டும். தமிழ்நாட்டில் போதை பொருள் நடமாட்டம் என்பது சட்டம் – ஒழுங்கு பிரச்னை மட்டுமல்ல, சமூக ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும். எனவே தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்” என்றார். நாளை மறுதினம் (சனி) திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, தென்காசி ஆகிய 12 மாவட்ட ஆட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடைபெறுகிறது.

The post 14 மாவட்ட கலெக்டர்களை தொடர்ந்து இன்று 2வது நாளாக 12 மாவட்ட ஆட்சி தலைவர்களுடன் ஆலோசனை.! தலைமை செயலாளர் தலைமையில் நடந்தது appeared first on Dinakaran.

Tags : 14 District Collectors ,12 ,District ,Heads ,Chennai ,Mudhalvar Mu. K. Stalin ,14th district ,12 District Heads ,Tamil Nadu ,of ,Government ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும்...