×

விஷச் சாராய உயிரிழப்பு சம்பவம்.. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் நீதிபதி கோகுல்தாஸ் ஆய்வு!!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் நீதிபதி கோகுல்தாஸ் ஆய்வு மேற்கொண்டார். கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் மெத்தனால் கலந்த விஷச் சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 47-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 100-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து இச்சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று உத்தரவிட்டு இருந்தார்.

மேலும் இந்த ஆணையம், சம்பவம் குறித்து முழுமையாக விசாரித்து தனது பரிந்துரைகளை மூன்று மாதங்களுக்குள் வழங்கும் என தெரிவித்து இருந்தார். இந்நிலையில், கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையிலான ஒருநபர் ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த், எஸ்பி, வருவாய் அலுவலர் உள்ளிட்டோருடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

பின்னர் விஷச் சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களிடம் விவரங்களை கேட்டறிந்தார். நீதிபதி கோகுல்தாஸ் உடன் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த், வருவாய் துறை அதிகாரிகள் இருந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் முன்னதாக தனித்தனியாக விசாரணை நடத்தினார். விஷச் சாராயம் தொடர்பாக கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் வீடு வீடாகச் சென்று நீதிபதி கோகுல்தாஸ் விசாரணை நடத்தினார். அதனை தொடர்ந்து உயிரிழப்பு தொடர்பாக 4 விதமான முறையில் விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதி கோகுல்தாஸ் தெரிவித்துள்ளார்.

The post விஷச் சாராய உயிரிழப்பு சம்பவம்.. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் நீதிபதி கோகுல்தாஸ் ஆய்வு!! appeared first on Dinakaran.

Tags : Judge ,Kogultas ,Kallakurichi Government Hospital ,Kallakurichi ,Kokultas ,Kalalakurichi Karunapuram ,
× RELATED கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் நீதிபதி கோகுல்தாஸ் ஆய்வு