×

வாடகை வீடு விவகாரத்தில் தலையிட்டதாக நடிகர் தனுஷக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு முடித்து வைப்பு

சென்னை: வாடகை வீடு விவகாரத்தில் தலையிட்டதாக நடிகர் தனுஷக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு முடித்து வைக்கப்பட்டது. போயஸ் கார்டனில் தான் வசித்த வாடகை வீட்டை தனுஷ் வாங்கியதால் காலி செய்ய வற்புறுத்தியதாக அஜய் குமார் மனு தாக்கல் செய்திருந்தார். இரு தரப்பிற்கிடையே சமரசம் ஏற்பட்டதை அடுத்து வழக்கை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது.

சென்னை போயஸ் கார்டனில் நள்ளினா ராமலட்சுமி என்பவருக்கு சொந்தமான வீடு ஒன்று உள்ளது. அந்த வீட்டில் கடந்த 2022ம் ஆண்டு முதல் அஜய்குமார் என்பவர் வசித்து வந்தார். ஆனால் இந்த வீட்டை நடிகர் வாங்கியுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் அந்த வீட்டிற்கு சென்ற தனுஷ் தரப்பு நபர்கள் அஜய்குமாரிடம், இந்த வீட்டை நடிகர் தனுஷ் வாங்கிவிட்டார் அதனால் உடனடியாக காலி செய்ய வேண்டும் என அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனை எதிர்த்து உயர்நீதிமன்றம் அஜய்குமார் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், தற்போது வரை தன்னுடைய வாடகை ஒப்பந்தம் முடியவில்லை, தான் உரிய நேரத்தில் வாடகையை செலுத்தி வருகிறேன். அனால் இதனை பொருட்படுத்தாமல் வீட்டின் மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்பை நடிகர் தனுஷ் தரப்பினர் துண்டித்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்திருப்பதாக அஜய்குமார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு நீதிமன்றம் இன்று விசாரணைக்கு வந்தபோது, காணொளி காட்சி மூலமாக தனுஷ் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார். அவர் தரப்பிலிருந்து ஆஜரான வழக்கறிஞர், தனுஷிற்கும், வழக்கு தொடந்த நபருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டுவிட்டது. அதுமட்டுமில்லாமல் அந்த வீட்டின் சாவி கடந்த மாதம் தனுஷிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதாக வழக்கறிஞர் தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம் இந்த வழக்கை முடித்துவைத்தது.

The post வாடகை வீடு விவகாரத்தில் தலையிட்டதாக நடிகர் தனுஷக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு முடித்து வைப்பு appeared first on Dinakaran.

Tags : Dhanush ,CHENNAI ,Ajay Kumar ,Boise Garden ,Dinakaran ,
× RELATED ரவி அரசு இயக்கத்தில் சிவராஜ்குமார் நடிக்கும் ஜாவா