×

பெரியார் பல்கலை. துணைவேந்தருக்கு பணி நீட்டிப்பு வழங்க எதிர்ப்பு

சென்னை: ஊழல் முறைகேட்டில் சிக்கிய துணைவேந்தர் ஜெகநாதனின் பதவிக்காலத்தை நீட்டிக்க எதிர்ப்பு எழுந்துள்ளது. ஆளுநர், முதலமைச்சருக்கு 500 பக்கங்கள் கொண்ட மனுவை அனுப்பியுள்ளனர். அதில்; இம்மாத இறுதியில் பணிநிறைவு செய்ய உள்ள துணைவேந்தர் ஜெகநாதனை பணிநீட்டிப்பு செய்ய தீவிர முயற்சி நடந்து வருகிறது. பெரியார் பல்கலை.யில் ஊழல் நடந்தது உள்ளாட்சி தணிக்கைத்துறை ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளது . 2021-ல் துணைவேந்தராக பதவியேற்ற ஜெகநாதன் பதவியேற்றது முதல் சர்ச்சைக்குரிய செயல்பாடுகளையே முன்னெடுத்து வருகிறார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

The post பெரியார் பல்கலை. துணைவேந்தருக்கு பணி நீட்டிப்பு வழங்க எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Periyar University ,CHENNAI ,Vice Chancellor ,Jagannathan ,chief minister ,Vice ,Dinakaran ,
× RELATED சேலம் பெரியார் பல்கலைக்கழக...