×

தினை அரிசி பருப்பு சாதம்

தேவையான பொருட்கள்

தினை அரிசி – 1 கப்
(சிறு) பாசிப்பருப்பு – கால் கப்
பச்சை மிளகாய் – 1
பூண்டு பல் – 4
சின்ன வெங்காயம் – 3
பெருங்காயம் – கால் ஸ்பூன்
உப்பு – தேவைக்கு
மஞ்சள் பொடி – கால் ஸ்பூன்.

தாளிக்க

சமையல் எண்ணெய் – 3 ஸ்பூன்
கடுகு – கால் ஸ்பூன்
உளுந்தம்பருப்பு – அரை ஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கொத்து
வரமிளகாய் – 1.

செய்முறை

முதலில் தினை அரிசி மற்றும் சிறு பருப்பினை சுத்தம் செய்ய வேண்டும். பின் குக்கரில் மூன்று பங்கு தண்ணீர் ஊற்றி பருப்பு, தினை அரிசி, மஞ்சள் பொடி, பெருங்காயப்பொடி, வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வேகவைக்கவும். ஒரு விசில் வந்ததும் சிம்மில் ஐந்து நிமிடங்கள் வைத்து பின் இறக்கவும். நன்கு குழைவாக இருக்க வேண்டும். உப்பு சேர்க்கவும். இப்போது வேறு வாணலியில் 3 ஸ்பூன் நெய் சேர்த்து கடுகு, உளுந்தம்பருப்பு, வர மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சாதத்தில் சேர்க்கவும். அவ்வளவுதான். தினை அரிசி பருப்பு சாதம் ரெடி!

The post தினை அரிசி பருப்பு சாதம் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED சிறுவர்களை தொடர்ந்து போதை மாத்திரைக்கு அடிமையாகும் சிறுமிகள்