×

மாம்பழ தயிர்பச்சடி

தேவையானவை:

புளிக்காத புது தயிர் – 1 கப்,
நன்கு பழுத்த மாம்பழம் – 1,
பச்சை மிளகாய் – 1,
மல்லித்தழை (விருப்பப் பட்டால்) – சிறிது,
தேங்காய் துருவல் – 1 டேபிள் ஸ்பூன்,
உப்பு – தேவைக்கு.

தாளிக்க:

கடுகு – அரை டீஸ்பூன்,
எண்ணெய் – 1 டீஸ்பூன்.

செய்முறை:

மாம்பழத்தை கழுவி, தோல் சீவி, சிறு சிறு துண்டுகளாக நறுக்குங்கள். பச்சை மிளகாய், தேங்காயை கரகரப்பாக அரையுங்கள். இதனுடன் மாம்பழத் துண்டுகளை சேர்த்து, தேவையான உப்பு சேர்த்து கையால் நன்கு பிசைந்து கொள்ளுங்கள்.அத்துடன் தயிர் சேர்த்து நன்கு கலந்து, எண்ணெயைக் காய வைத்து கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேருங்கள். இனிப்பும் புளிப்பும் கலந்த இதமான தயிர் பச்சடி இது.

 

The post மாம்பழ தயிர்பச்சடி appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED எந்தக் கிரகம் நல்லது செய்யும்?