×

எச்சில் இலையில் அங்கப் பிரதட்சணம் செய்யலாம் என்ற தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு தடை கோரிய வழக்கு

மதுரை: எச்சில் இலையில் அங்கப் பிரதட்சணம் செய்யலாம் என்ற தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு தடை கோரிய வழக்கு தொடரப்பட்டுள்ளது. நேரூர் சத்குரு சதாசிவா பிரம்மேந்திராள் சபா தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. விரிவான விசாரணைக்காக வழக்கை வரும் 25-ம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்தது. தனிநீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவை எதிர்த்து கரூர் ஆட்சியர் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2015 முதல் தற்போது வரை பக்தர்கள் உணவருந்திய இலையில் அங்கப் பிரதட்சணம் செய்யும் நிகழ்வுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. பழைய உத்தரவுகளை மறைத்து, தங்களுக்கு சாதகமான உத்தரவை பெற்றுவிட்டனர் என அரசு தரப்பு தெரிவித்துள்ளது.

The post எச்சில் இலையில் அங்கப் பிரதட்சணம் செய்யலாம் என்ற தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு தடை கோரிய வழக்கு appeared first on Dinakaran.

Tags : Special Judge ,G.R. Swaminathan ,Madurai ,High Court ,Nerur Sadhguru Sadasiva Brahmendra Sabha ,Dinakaran ,
× RELATED மதுரை அழகர்கோயில் ஆடித்திருவிழா ஜூலை 13இல் கொடியேற்றத்துடன் தொடக்கம்..!!