×

ரேபரேலி தொகுதி எம்.பி.யாக தொடர்வதா அல்லது வயநாடு எம்.பி.யாக தொடர்வதா என மக்களை கேட்டு முடிவு செய்வேன்: ராகுல் காந்தி

வயநாடு: ரேபரேலி தொகுதி எம்.பி.யாக தொடர்வதா அல்லது வயநாடு எம்.பி.யாக தொடர்வதா என மக்களை கேட்டு முடிவு செய்வேன் என வயநாடு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி கூறியுள்ளார். “எந்த தொகுதி எம்.பியாக தொடர்வது என்பதை முடிவு எடுப்பதில் தர்மசங்கடமான சூழல் உள்ளது. துரதிருஷ்டவசமாக பிரதமர் மோடியை போல் நான் கடவுளால் வழிகாட்டப்படுபவன் அல்ல, நான் சாதாரண மனிதன், மோடியை போல் பரமாத்மாவால் அனுப்பப்பட்டவர் அல்ல” எனவும் ராகுல் காந்தி பேசினார்.

The post ரேபரேலி தொகுதி எம்.பி.யாக தொடர்வதா அல்லது வயநாடு எம்.பி.யாக தொடர்வதா என மக்களை கேட்டு முடிவு செய்வேன்: ராகுல் காந்தி appeared first on Dinakaran.

Tags : Raebareli ,Wayanad ,Rahul Gandhi ,Rae Bareli ,Dinakaran ,
× RELATED அவதூறுகளை சந்தித்தபோதெல்லாம் வயநாடு...